பனகல் அரசரின் புகழ் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என்று முதல்வர் ஜோசப் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
நீதிக் கட்சி தலைவா்களில் ஒருவரும், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வருமான பனகல் அரசரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சர் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
நீதிக்கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராகத் திகழ்ந்த அவர், அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதிப்படுத்தினார். அவரது முற்போக்கான சீர்திருத்தங்கள், பின்னாளில் தந்தை பெரியார் அவர்கள் முன்னெடுத்த சுயமரியாதை மற்றும் சமூக நீதிப் போராட்டங்களுக்கு வலுவான அடித்தளமாக அமைந்தன. கல்வி வளர்ச்சிக்கான அவரது அக்கறை, மக்கள் நலன் சார்ந்த நிர்வாகப் பார்வை ஆகியவை இன்றும் வழிகாட்டும் உயரிய மரபுகளாகத் திகழ்கின்றன.
பனகல் அரசரின் புகழ் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
The fame of the Panagal arasar will endure in history — Chief Minister Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!
திருச்சி டூ கரூர்! சாலை வழியாக செல்லும் முதல்வர் விஜய்! வழிநெடுகிலும் மக்கள் வரவேற்பு!

நலத்திட்டங்கள், அரசுப் பணி ஆணை, 10 கிமீ சாலை வலம்... கரூர் ஏற்பாடுகள் என்னென்ன?
சமூகநீதியின் முன்னோடி, ஒடுக்கப்பட்டவர்களின் குரல் இரட்டைமலை சீனிவாசன்! முதல்வர் விஜய் புகழாரம்
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 12 முதல் 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஃபிபா: ஆரம்பமாகிறது காலிறுதிச் சுற்று! | FIFA | FIFA World Cup |

MK Stalin உடன் மீண்டும் பேச்சா? குழப்பும் Thirumavalavan



