
ஹபீபி முதல் ஹாய் வரை: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! - சித்திரிப்பு / விஜய்
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைப் பார்ப்போம்.
1ஹபீபி

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவான ஹபீபி திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் நாளை (செப். 25) வெளியாகிறது.
கடையநல்லூரிலுள்ள இஸ்லாமியர்களின் வாழ்வியலைப் பேசும் படமாக உருவான இதில் நாயகனாக ஈசாவும் நாயகியாக மாளவிகா மனோஜும் நடித்துள்ளனர். இயக்குநர் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
2அங்கீகாரம்

இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில் கே.ஜே.ஆர். ராஜேஷ் நடித்து வெளியான அங்கீகாரம் திரைப்படம், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
இந்தப் படத்தில் சிந்தூரி விஸ்வநாத், வசுந்தரா, ரங்கராஜ் பாண்டே, விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, ஆண்டனி, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
3ஹாய்

கவின் - நயன்தாரா நடிப்பில் அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் வெளியான ஹாய் திரைப்படம் நாளை ஜீ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் மறைந்த இயக்குநர் பாக்யராஜ், நடிகர்கள் ராதிகா சரத்குமார், பிரபு, பூர்ணிமா, காவ்யா அறிவுமணி, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
4ரம்பா ஊர்வசி மேனகா

சந்திர மோகன் சிந்தடா இயக்கத்தில் அல்லரி நரேஷ், சுரபி, வென்னேலா கிஷோர், ராஷி சிங், விஷ்ணு பிரியா, அஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ரம்பா ஊர்வசி மேனகா.
இந்தத் திரைப்படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
5போட்டோகிராபர்

நடிகர் அஷ்ரப் இயக்கி நடித்த போட்டோகிராபர் திரைப்படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
அவருக்கு ஜோடியாக ஜனனி சுவாமிநாதன் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் ஆடுகளம் நரேன், கருணாகரன், உறியடி சிவா, வேலா ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, தேவி மகேஷ், ஜே.பி. ஜெய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
6டாக்ஸிக்

கேவிஎன் புரடக்ஷன் தயாரிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் வெளியான டாக்ஸிக் திரைப்படம் ஜீ5 ஓடிடியில் நாளை வெளியாகிறது.
இந்தப் படத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, டாரா சுதாரியா, ருக்மணி வசந்த் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
7அகதா

காமாட்சி பாஸ்கர்லா, ஷரவன் ரெட்டி, உல்கா குப்தா, ஜோவிகா நடிப்பில் எம்.எஸ். ராஜு எழுதி இயக்கிய திரைப்படம் அகதா.
இந்தத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நாளை வெளியாகவுள்ளது.
8கடந்த வார ஓடிடி (மொத ராத்திரி)

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் நடிகர் ரிஷிகாந்த் நடிப்பில் வெளியான மொத ராத்திரி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
நகைச்சுவைத் தொடர்பான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், அனிஷ்மா அனில்குமார், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
9இருமுடி

ஷிவ நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் வெளியான இருமுடி திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
பிரியா பவானி ஷங்கர், பேபி நக்ஷத்திரா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் பார்க்கலாம்.
10ராம் அண்ட் லீலா

அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ரியோ நடித்துள்ள ராம் அண்ட் லீலா திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
நகைச்சுவை மற்றும் ஃபேன்டஸி கலந்த காதல் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நாயகியாக வர்திகா நடித்துள்ளார். அங்கித் மேனன் இசையமைத்துள்ளார்.
11துடக்கம்

ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா நாயகியாக அறிமுகமாகியுள்ள துடக்கம் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையாக உருவான இப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் நடித்துள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
Summary
this week ott release movies hi habeebi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





