ஜெம் வீரமணியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்புஞானேஷ் குமார் உருவ பொம்மை எரிப்பு! ஆசிய விளையாட்டில் குண்டு எறிதலில் வெண்கலம்!

விமர்சனங்களிலிருந்து கற்றுக்கொள்கிறேன்: நடிகர் நானி

நடிகர் நானியின் பதிவு குறித்து...

நடிகர் நானி

Published On :

நடிகர் நானி தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களிலிருந்து கற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நடிகர் நானி நடித்த தி பாரடைஸ் திரைப்படம் நேற்று (செப்.24) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பெரிய எதிர்பார்ப்புகளுடன் இருந்ததால் போதிய திருப்தியைக் கொடுக்காமல் ஏமாற்றமான திரைப்படமாக அமைந்துள்ளது. இருந்தாலும், முதல் நாள் வசூலாக ரூ. 88 கோடியை வசூலித்து கவனிக்கவும் வைத்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் நானி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”உங்களுடைய அனைத்து கருத்துகளையும் பார்த்தேன். நீங்கள் காட்டிய அன்பையும், ரசித்துச் செய்த நகைச்சுவையான கிண்டல்களையும் மிகவும் ரசித்தேன். பார்வையாளர்கள் இந்தப் படத்தைத் தங்களுடைய படமாக ஏற்றுக்கொண்ட விதம் என் மனதை நெகிழச் செய்தது. அதேபோல், விமர்சகர்களும் விமர்சனங்களை முன்வைத்தவர்களும் சுட்டிக்காட்டிய குறைகளிலிருந்தும் நிறைய கற்றுக்கொண்டேன்.

எல்லாவற்றிற்கும் நன்றி என்று சொல்வதைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. உங்களுக்கு ஒரு வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில், மிகுந்த உழைப்புடனும், ரத்தம் மற்றும் வியர்வையுடனும் தி பாரடைஸ் படத்தை உருவாக்கியுள்ளோம். இனி இந்தப் படம் உங்களுடையது. அதை நீங்கள் கொண்டாடலாம், விமர்சிக்கலாம், தீர்ப்பளிக்கலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Nani has stated that he learns from the criticisms directed at him.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.