FOLLOW US

ON GOOGLE DISCOVER

விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

நடிகர் நானியின் பாரடைஸ் வெளியீட்டுத் தேதி!

பாரடைஸ் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது...

நடிகர் நானி

Published On :7 செப்டம்பர் 2026, 5:54 pm IST

நடிகர் நானி நடிப்பில் உருவான பாரடைஸ் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் நானி தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக வியாபார ரீதியாகவும் பெரிய நட்சத்திர நடிகராக உருவெடுத்துள்ளார்.

நானி நடிப்பில் கடைசியாக வெளியான சரிபோத சனிவாரம், ஹிட் - 3 ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாக ரூ. 100 கோடியைக் கடந்ததால் அவரது படங்களின் பட்ஜெட்டும் அதிகரித்து வருகின்றன.

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் என்கிற படத்தில் நடிக்கிறார். இப்படம் ஆக்சன் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளிச்சென்றது.

Story image

இந்த நிலையில், தி பாரடைஸ் திரைப்படம் வருகிற செப். 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இன்னும் ஒரு பாடல் காட்சியை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்ட நிலையில், விரைவாக வெளியீட்டை வைத்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேதிக்கே திரைப்படம் வருமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

The release date of the film Paradise, starring actor Nani, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.