
நடிகர் பாலகிருஷ்ணாவின் தாதா வெளியீட்டுத் தேதி!
தாதா வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...

நடிகர் பாலகிருஷ்ணா
நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவான தாதா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா தனது 111-வது படத்தில் நடித்து வருகிறார். தாதா எனப் பெயரிடப்பட்ட இப்படத்தை இயக்குநர் கோபிசந்த் மல்லினேனி இயக்கி வருகிறார்.
இப்படத்தில் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, மஞ்சு மனோஜ், சரத் குமார், அபிமன்யு சிங், ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தமன் இசையமைப்பில் இப்படத்தின் அறிமுக பாடலான ‘கிங் ஆஃப் கேயாஸ்’ பாடல் லிரிக் விடியோ வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், தாதா திரைப்படம் டிச. 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The release date of the movie Dada, starring actor Balakrishna, has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







