
ஜெய் ஸ்ரீ ராம் என முழங்கிய அமெரிக்க யூடியூப் பிரபலம்!
ராமாயணா பட நிகழ்ச்சியில் அமெரிக்க யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் பங்கேற்றது குறித்து...

சாய் பல்லவி, ரன்பீர் கபூர், மிஸ்டர் பீஸ்ட் - பிடிஐ
ராமாயணா பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெரிக்க யூடியூப் பிரபலம் மிஸ்டர் பீஸ்ட், ஜெய் ஸ்ரீ ராம் என முழங்கிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியுள்ள ராமாயணா திரைப்படத்தில், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், கன்னட நடிகர் யஷ், தமிழ் நடிகை சாய் பல்லவி, ரவி துபே உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், ஹன்ஸ் ஸிம்மர் (ஹாலிவுட்) இசையமைக்கும்
இப்படத்தை நமித் மல்ஹோத்ரா பிரமாண்ட பொருள்செலவில் தயாரித்துள்ளார்.
இப்படத்துக்கான புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வரும் நிலையில், இப்படத்தை உலக அரங்கில் கொண்டு செல்வதற்காக அமெரிக்க யூடியூப் பிரபலம் மிஸ்டர் பீஸ்ட், இப்பட விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற முன்னோட்ட நிகழ்வில் படக்குழுவுடன் பங்கேற்ற மிஸ்டர் பீஸ்ட்டுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரசிகர்களுடன் உரையாடலைத் தொடங்குவதற்கு முன்பு, ரசிகர்களைப் பார்த்து ஜெய் ஸ்ரீ ராம் என முழங்கினார்.
அப்போது அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் பலர் ஆரவாரம் செய்தனர். அருகில் இருந்த இயக்குநர் நிதேஷ், ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
அமெரிக்காவைச் சேர்ந்த யூடியூபரை அழைத்து ஜெய் ஸ்ரீ ராம் கூற வைத்துள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Summary
American YouTube celebrity chants Jai Shri Ram in ramayana movie pramotion
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





