வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

மீண்டும் துரந்தர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்... டாக்ஸிக் படத்தைத் தாக்கிய ராம் கோபால் வர்மா?

இயக்குநர் ராம் கோபால் வர்மா பதிவு வைரல்...

இயக்குநர் ராம் கோபால் வர்மா, நடிகர் யஷ்

Published On :

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் சமூக வலைதளப் பதிவு ரசிகர்களிடம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடித்த டாக்ஸிக் திரைப்படம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. திரைக்கதை மிக மோசமாக இருப்பதாகவும் எந்தக் காட்சியும் சரியாக எழுதப்படவில்லை என்றும் ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால், இப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய தோல்விப்படமாகும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், முதல் நாள் வசூலாக இப்படம் உலளவில் ரூ. 140 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தியாவிலேயே இப்படம் ரூ. 101 கோடி வரை வசூலித்துள்ளதாம். இதனால், நடிகர் ஷாருக்கானின் ஜவான் முதல்நாள் இந்திய வசூலை நடிகர் யஷ் முந்தியிருக்கிறார்.

இந்த நிலையில், 3 மணி நேரத்துக்கும் அதிகமான இந்த பான் இந்திய திரைப்படத்தைக் கிண்டலடிக்கும் விதமாக இயக்குநர் ராம் கோபால் வர்மா, “நான் மீண்டும் துரந்தர் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” எனப் பதிவிட்டார். இதனைக் கண்ட ரசிகர்கள் டாக்ஸிக்கைதான் தாக்குகிறார் என பதிவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

இயக்குநர் ராம் கோபால் வர்மா துரந்தர் திரைப்படத்தை அதிகம் பாராட்டிய இயக்குநர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Ram Gopal Varma's social media post has sparked a debate among fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.