
ஓடிடியில் ராம் அண்ட் லீலா எப்போது?
ராம் அண்ட் லீலா படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

ராம் அண்ட் லீலா படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ்
நடிகர் ரியோவின் ராம் அண்ட் லீலா படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.
அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ராம் அண்ட் லீலா. இதில் ரியோ நாயகனாகவும் வர்திகா நாயகியாகவும் நடித்துள்ளனர்.
மேலும் இந்தப் படத்தில் முனிஷ்காந்த், மாகாபா ஆனந்த், மாளவிகா அவினாஷ், சேத்தன், தீபா வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அங்கித் மேனன் இசையமைத்துள்ளார்.
நகைச்சுவை மற்றும் ஃபேன்டஸி கலந்த காதல் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், கடந்த ஆக. 21 ஆம் தேதி வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
திருமணம் செய்ய ஒரு ஆண் என்னென்ன சிக்கல்களையும் வித்தியாசமான பிரச்னைகளையும் சந்திக்கிறான் என்பதை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராம் அண்ட் லீலா திரைப்படம் செப். 18 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
Summary
Information regarding the OTT release of actor Rio film Ram and Leela has come to light
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





