
பிரபல தொகுப்பாளினியைக் காதலிக்கும் அட்டகத்தி தினேஷ்!
அட்டக்கத்தி தினேஷ் உடனான காதலை அறிவித்த தொகுப்பாளர் விஜே எழிலரசி.

அட்டக்கத்தி தினேஷ் - விஜே எழிலரசி - படம்: இன்ஸ்டாகிராம்
பிரபல தொகுப்பாளினி, நடிகர் அட்டக்கத்தி தினேஷ் உடனான காதலை ரசிகர்களுக்கு வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் விஆர் தினேஷ், குக்கூ விசாரணை, கபாலி, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
இதனைத் தொடர்ந்து, லப்பர் பந்து படத்தின் வெற்றியின் மூலமாக கெத்து தினேஷ் என அழைக்கப்படுகிறார். இவர் தற்போது பா. இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதனிடையே நடிகர் விஆர் தினேஷ் தனது 26ஆவது படமான பந்தா கேங்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படமும் அட்டக்கத்தி படத்தின் பாணியில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் தினேஷ், தான் ஒரு பெண்ணைக் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், தனது காதல் வாழ்க்கை குறித்து நேர்காணல்களில் சூசமாக தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், தொகுப்பாளர் விஜே எழிலரசி, தான் நடிகர் அட்டக்கத்தி தினேஷை காதலித்து வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து, அவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
விஜே எழிலரசி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ”என்னவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.எப்போதும் உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கட்டும்.
வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பயணங்கள் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் நான் உங்களை மட்டும்தான் தேர்ந்தெடுப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பொறியியல் பட்டதாரியான தொகுப்பாளர் விஜே எழிலரசி, தனியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பல முக்கிய நடிகர்களை நேர்காணல் செய்தும் வருகிறார்.
இவர்களின் திருமணம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Host VJ Ezhilarasi has openly announced her relationship with actor Dinesh to fans.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






