கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு எனது அஞ்சலி: கனிமொழி பதிவு!ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது: டிரம்ப்தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சிதான் நீடிக்கும்: திருமாவளவன்எல் நினோ! தமிழகத்தில் அடுத்த 3 வாரங்களுக்கு இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,488 கன அடியாக குறைவு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரையில் முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்!மே.இந்திய தீவுகள் - இந்திய ஒருநாள் தொடா்: இன்று தொடக்கம்ஆதாரங்களை அழிக்க ஜெம் வீரமணியிடம் ரூ. 24 லட்சம் பெற்றாா் சாந்தி! காவல் துறை பதில் மனு! ரூ. 55,900 கோடி அந்நிய முதலீட்டை ஈா்த்து தமிழகம் முதலிடம்!ஏ.ஐ. விவகாரங்களுக்குப் புதிய பேச்சுக் குழு! அமெரிக்கா, சீனா உடன்பாடு! எஸ்ஐஆா் விவகாரம்: இண்டி கூட்டணி செப். 30-இல் கூடுகிறது?

பந்தா கேங்ஸ்: விஆர் தினேஷ் பிறந்த நாளில் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகர் விஆர் தினேஷின் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது குறித்து...

First-look poster of the movie 'Banda Gangs'.

பந்தா கேங்ஸ் படத்தின் முதல் பார்வை போஸ்டர். - படம்: எக்ஸ் / விஆர் தினேஷ்

Published On :

அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் விஆர் தினேஷின் புதிய படத்தின் பெயர் அறிவிப்புடன் முதல் பார்வை போஸ்டரும் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

நடிகர் விஆர் தினேஷ் தனது 26ஆவது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்துக்கு பந்தா கேங்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதுவும் அட்டக்கத்தி சாயலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அறிமுக இயக்குநர் மதி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை வி6 ஃபிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பாக வேலாயுதம் என்பவர் தயாரித்துள்ளார்.

அட்டக்கத்தி தினேஷ் என்றழைக்கப்பட்டவர் லப்பர் பந்து படத்தின் வெற்றியின் மூலமாக கெத்து தினேஷ் என அழைக்கப்பட்டார். இவர் தற்போது பா. இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

 ’ஓஜி ரூட்டு தல’ என்ற அடைமொழியுடன் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கயல் ஆனந்தி, லிங்கேஷ், சுபா வரதராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 

பா. இரஞ்சித் இயக்கியுள்ள வேட்டுவம் திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், பலரும் இவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கெத்து தினேஷ் எனக் கூறி வருகிறார்கள்.

Summary

Banda Gangs: New film title announced on VR Dinesh's birthday!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.