
விநோத உலகத்தை அறிமுகப்படுத்தும் ட்ரோன்ஸ் திரைப்படம்! எகிறும் எதிர்பார்ப்பு!
ட்ரோன்ஸ் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

ட்ரோன்ஸ் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் - படம்: எக்ஸ்
விநோத உலகத்தை அறிமுகப்படுத்தும் ட்ரோன்ஸ் திரைப்படத்தின் மிரட்டலான 3 முதல் பார்வை போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
ஜிஎம் மோர்கன் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி திரைப்படம் ட்ரோன்ஸ்.
வித்தியாசமான கற்பனை உலகம், ஹாரர் மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த கதைக்களம் ஆகியவை ட்ரோன்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ உலகில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் படத்தின் விநோதமான உலகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. முதல் போஸ்டரில், அடர்ந்த காடு, முழுநிலவு, மர்மமான கோட்டை, வௌவால்கள் மற்றும் தேவதை போன்ற உருவங்களுக்கு நடுவே கதாநாயகி காட்சியளிப்பதன் மூலம் ஒரு மாயாஜால ஃபேண்டஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது போஸ்டரில், படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒன்றாக இடம்பெற, அருகில் ட்ரோன், மர்மமான வயதான பெண், வித்தியாசமான சாதனங்கள் என சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஃபேண்டஸி கலந்த உலகை வெளிப்படுத்துகிறது.
மூன்றாவது போஸ்டரில், எண்ணற்ற பொம்மைகள் சூழ்ந்த இருண்ட அறையில் ஆக்ரோஷமான தோற்றத்தில் ஒரு சூனியக்காரி இடம்பெற்றிருப்பது படத்தின் ஹாரர் மற்றும் திகில் அம்சங்களை மிரட்டலாக எடுத்துக்காட்டுகிறது.
இந்தப் படத்தில் நடிகைகள் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர் ஆகியோருடன் தேவதர்ஷினி, பரிதாபங்கள் புகழ் டிராவிட் செல்வம், விஜய் டிவி புகழ் குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் மற்றும் இப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகும் ஆர்ஜே தீபக் உள்ளிட்டோர் கதையின் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவை ஜெயந்த் சேது மாதவன் மேற்கொண்டுள்ளார். எஸ். ஆர். ஹரி இசையமைக்க, சதீஷ் சூர்யா படத்தொகுப்பை கவனித்துள்ளார்
தயாரிப்பாளர் செந்தில் இப்படத்தின் முழு உரிமையை வாங்கியுள்ளார். இதன்மூலம் ஃபைவ் ஸ்டார் நிறுவனம் சார்பில் இப்படத்தை இந்தியாவெங்கும் பல மொழிகளில் வெளியிடுகிறார்.
இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ட்ரோன்ஸ் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது.
Summary
Three striking first-look posters for the movie Drones, which introduces a bizarre world, have been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





