
ஓடிடியில் வெளியாகும் நகைச்சுவை கலந்த சஸ்பென்ஸ் திரைப்படம்!
ரோமாஞ்சகம் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

ரோமாஞ்சகம் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ்
தெலுங்கு மொழித் திரைப்படமான ரோமாஞ்சகம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் வேணு கோபால் ரெட்டி இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் சுமந்த் பிரபாஸ் மற்றும் அனந்திகா சனில்குமார் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரோமாஞ்சகம் திரைப்படத்தை பிரபல இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா வழங்க, பிரணய் ரெட்டி வங்கா தயாரித்துள்ளார். இந்தப் படம் நகைச்சுவை கலந்து சஸ்பென்ஸ் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் படத்தில் உபேந்திர லிமாயே, வெங்கடேஷ் ககுமானு, மணி ஏகுர்லா, சாய் சோஹன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வாசுகி வைபவ் இசையமைத்துள்ளார்
தன்னுடைய காதலி திடீரென காணாமல் போவதால், அவரைத் தேடி செல்லும் நாயகன் மற்றும் நண்பர்கள் மேற்கொள்ளும் மர்மப் பயணத்தை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரோமாஞ்சகம் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் அக். 1 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
Summary
The OTT release date for the Telugu film Romanchagam has been officially announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







