கண்களைக் கவரத் தடுமாறுகிறதா நிறம்? திரைவிமர்சனம்
இயக்குநர் பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ராணி நடிப்பில் வெளியாகியிருக்கும் நிறம் திரைப்படம் குறித்த விமர்சனம்

நிறம் திரைப்படக் காட்சி
நிறம்
இயக்குநர் பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ராணி நடிப்பில் வெளியாகியிருக்கிறது நிறம் திரைப்படம்.
மருத்துவரான முகேன் ராவ் பணியாற்று மருத்துவமனையில் படித்து வருகிறார் நாயகியான ப்ரீத்தி அஸ்ராணி. சமூகத்தில் தவறு நடக்கும் போதெல்லாம் அதை வீடியோ எடுத்து கேள்வி கேட்கும் ப்ரீத்தா அதனாலேயே காணாமலும் போகிறார். அவர் எங்கு போனார்? என்ன ஆனார்? அவரை நாயகன் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே நிறம் திரைப்படத்தின் கதை.
நாயகனாக வந்திருக்கும் முகேன் அதற்குண்டான அழுத்தமான நடிப்பைக் கொடுக்கத் தவறியிருக்கிறார். அயோத்தி தொடங்கி அப்பா குட்டி வரை கதாபாத்திரத் தேர்வில் கவனம் செலுத்தி வந்த பிரீத்தி எதன் அடிப்படையில் இக்கதையில் நுழைந்தார் என்பது புதிராகவே இருக்கிறது. அவரது நடிப்பும் பெரிய அளவு கை கொடுக்காதது ஏமாற்றம். பரிதாபங்கள் டிராவிட் மற்றும் சிலர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வழக்கமான கதை என்றாலும் திரைக்கதையாக அதை சுவாரஸ்யத்துடன் கொடுக்க தவறி இருக்கிறது படக்குழு. முன்பின் காட்சிகளில் கதை சொல்வது, யாருடைய பார்வையிலிருந்து கதை நகருகிறது எனும் கேள்வி, எல்லாவற்றையும் வசனங்கள் வழியே கடத்தும் உத்தி ஆகியவை படத்திற்கு பெரிய அளவு கை கொடுக்கவில்லை.
தேவையற்ற நேரத்தில் டாஸ்மாக்கில் குத்துபாடல் வருகிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே அடுத்த பத்து நிமிடத்தில் காதல் பாடல் எட்டிப் பார்க்கிறது. இரண்டு மணி நேரத்தை நிரப்பித்தள்ள எடுத்து வைத்த காட்சிகளைப் பயன்படுத்தி இருக்கிறதா படக்குழு என்பது எண்ணத் தோன்றும் வகையில் அமைந்திருக்கிறது திரைக்கதை.
திடீரென வில்லன்களிடம் இருக்கும் ரவுடி நாயகனுக்கு உதவுவது, சம்பந்தமில்லாமல் வில்லனுக்கு மருத்துவமனை உரிமையாளர் பயப்படுவது என லாஜிக் மீறல்கள் வரிசை கட்டி நிற்பதால் படத்தை பார்ப்பதற்கான எந்த ஆர்வமும் ஏற்படவில்லை. ஒளிப்பதிவும், இசையும் கூட படத்தைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. முயற்சித்திருந்தாலும் பலன் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.
வழக்கமான கதையைக் கூட வழக்கமான வகையில் கொடுக்க முடியாமல் தட்டு தடுமாறி மறைந்து நிற்கிறது நிறம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

