ராஜீவ்மேனன் கல்லூரியில் நடிப்பு

மின்சாரக் கனவு', "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன்,
ராஜீவ்மேனன் கல்லூரியில் நடிப்பு
Updated on
1 min read

மின்சாரக் கனவு', "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், தற்போது தனது மைண்ட் ஸ்கிரீன் இன்ஸ்டிட்யூட் கல்லூரியில் பரபரப்பாக இருந்து வருகிறார். ஒளிப்பதிவு, இயக்கம், திரைக்கதை உள்ளிட்ட பல பிரிவுகளில் கலைஞர்களை உருவாக்கி வரும் இந்த கல்லூரியில்,
தற்போது நடிப்புக்கென புதுப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ராஜீவ்மேனனிடம் பேசும் போது... 
""ஒளிப்பதிவு, இயக்கம் சார்ந்து பணியாற்றி வந்த நான், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் "மைண்ட் ஸ்கிரீன் இன்ஸ்டிட்யூட்' கல்லூரியை ஆரம்பித்தேன். ஒவ்வொரு ஐந்து ஆண்டிலும் ஒரு புது கற்பித்தல் முறையை அறிமுகப்படுத்துவோம். ஒளிப்பதிவு, இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல் தொடர்ந்து இப்போது நடிப்புக்கென தனி வகுப்பு தொடங்கியிருக்கிறோம். 
எங்கள் கல்லூரியில் இருந்து கற்று வெளியேறிய பலர் இன்டிபென்டன்ட் ஃப்லிம் எடுத்து பிரபலமாகி வருகிறார்கள். இயக்கம் பற்றிய படிப்பு முடித்த பலரும் இயக்குநர் ஆகும் முயற்சியில் இருக்கிறார்கள். "தரமணி' படத்தில் ஹீரோவாக நடித்தவர் இங்கே படித்தவர்தான். 
தற்கால சினிமாவுக்கு ஏற்ற மாதிரி நடிப்புக்கென புது வித பாணியை இதற்கு உருவாக்கி இருக்கிறோம். நடிகர் நாசர் இதன் முதன்மையாக இருந்து செயல்படுகிறார். 
இப்போது சினிமாவே ஒட்டுமொத்தமாக டிஜிட்டலுக்கு மாறிக் கொண்டு வருகிறது. ஒரு நடிகருக்கும் அது சம்பந்தப்பட்ட அறிவு வேண்டும். அதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த நடிப்புக்கான வகுப்பு'' என்றார் ராஜீவ்மேனன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com