நடிகை பிரியங்கா சோப்ரா வெளிநாட்டு பாப் பாடகர் நிக் ஜோனûஸ காதலித்து மணந்தார். பிரியங்காவை விட நிக் ஜோனஸ் வயது குறைந்தவர் என்பதால் அது சர்ச்சையாக பேசப்பட்டது. இதுபற்றி இருவரும் கண்டுகொள்ளாமல் திருமண சந்தோஷத்தில் மூழ்கியிருந்ததுடன் தேனிலவிற்காக வெளிநாடுகளில் சுற்றி வந்தனர். திருமணம், தேனிலவு முடிந்தபிறகும் இருவரும் ஒரு சில இடங்களில் நட்பு வட்டாரத்துக்காக திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொண்டாடினர். திருமண பரபரப்பு முடிந்து சகஜ நிலைக்கு தம்பதிகள் திரும்பியிருக்கின்றனர். இந்நிலையில் பிரியங்கா சோப்ரா கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, ஒருவர் ""நீங்கள் ஹிந்திக்காரரா'' என்றார். அதற்கு பதில் அளித்த பிரியங்கா, ""ஹிந்தி இல்லை, நான் இந்து. ஹிந்தி என்பது ஒரு மொழி, ஹிந்து என்பது மதம். இரண்டு வார்த்தைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதை முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள்'' என்றார். ""நீங்கள் சைவமா, அசைவமா'' என்று ஒருவர் கேட்டபோது, ""நான் சைவம் கிடையாது'' என்றார். அதேபோல் இன்னொருவர், ""உங்கள் கணவர் நிக் ஜோனûஸ விட உங்களுக்கு வயது அதிகமா?'' என்றார். அதைக்கேட்டு ஷாக் ஆன பிரியங்கா, ""ஆமாம், எனக்கு 10 வயது அதிகம்தான் இப்ப அதற்கென்ன'' என்பதுபோல் பதில் அளித்தார்.