விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

பிக் பாஸ் 2 என்றைக்கு ஆரம்பம்?: அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!

வாரத்தின் அனைத்து நாள்களிலும் தினமும் இரவு 9 மணிக்கு பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்றும்...

News image
Updated On :4 ஜூன் 2018, 5:23 am

எழில்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 100 நாள்கள் மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் சிநேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரிஷ் ஆகிய 4 பேரும் போட்டியிட்டார்கள். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இதரப் போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டார். கவிஞர் சிநேகன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 3-ம் இடத்தை ஹரிஷும் 4-ம் இடத்தை கணேஷ் வெங்கட்ராமும் பெற்றார்கள். வெற்றி பெற்ற ஆரவ் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையைப் பெற்றார்.

இந்நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதல்முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்தார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பானது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெற்றன.

இந்நிலையில் அனைவரும் எதிர்பார்க்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி, ஜூன் 17 முதல் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. நாளிதழ்களில் இதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். திங்கள் முதல் ஞாயிறு வரை வாரத்தின் அனைத்து நாள்களிலும் தினமும் இரவு 9 மணிக்கு பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்றும் விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.