/

"தமிழ் காணாமல் போகும் வாய்ப்புள்ளது

செம்மொழிப் பெருமை மிக்க தமிழ்மொழி காணாமல் போகும் வாய்ப்புள்ளதாக, தமிழறிஞர் க.பஞ்சாங்கம் தெரிவித்தார்.

Updated On :12 ஆகஸ்ட் 2013, 4:22 am IST

செம்மொழிப் பெருமை மிக்க தமிழ்மொழி காணாமல் போகும் வாய்ப்புள்ளதாக, தமிழறிஞர் க.பஞ்சாங்கம் தெரிவித்தார்.

பொள்ளாச்சி, என்.ஜி.எம். கல்லூரியில் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் க.பஞ்சாங்கம் பேசியது:

அனைத்து அறிவும் ஒரு மொழியைப் படிப்பதால் கிடைக்கும் என்ற வாய்ப்பு இருந்தால் மட்டுமே அந்த மொழி வாழும். அந்த வகையில் தமிழ் மொழியைப் படிப்பதால் அறிவு கிடைக்கும் என்ற வாய்ப்பு இல்லாததால் தான் பலர் வேறு மொழியைப் படிக்கின்றனர்.

ஒரு தேசிய இனத்தின் அடையாளம் என்ற பெருமை தாய்மொழி மூலம் மட்டுமே கிடைக்கும். தமிழினத்தின் உட்பகை சாதி. வெளிப்பகை பெரிய வணிக நிறுவனங்கள்.  நாட்டில் எந்த மாநிலத்திலும் தமிழகத்தைப் போல சாதிக்கு எதிரான போராட்டம் நடந்ததில்லை.

தமிழ் ஈழப் போராட்டம் 27 ஆண்டுகளாக அமைதி வழியிலும் 33 ஆண்டு காலம் ஆயுதமேந்தியும் நடந்தது. அவ்வாறு போராடிய இயக்கத்தை உலக நாடுகள் சேர்ந்து ஒழித்துக் கட்டிவிட்டன என்றார் பஞ்சாங்கம்.

சிற்பி அறக்கட்டளையின் தலைவர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் வரவேற்றார். பாரதிய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை தாங்கினார்.

கவிஞர் காசி ஆனந்தன் மற்றும் கவிஞர் இந்திரனுக்கு சிற்பி இலக்கிய விருதையும், ஓசை அமைப்பின் தலைவர் க.காளிதாசுக்கு பொ.மா.சுப்பிரமணியம் விருதையும் கிருஷ்ணராஜ் வாணவராயர் வழங்கினார்.

கவிஞர் சிற்பியின் "பூஜ்யங்களின் சங்கிலி' கவிதை நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த டாக்டர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.  விருது பெற்றவர்கள் ஏற்புரையாற்றினர். பேராசிரியர் சொ.சேதுபதி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.