பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் பதவி விலகத் தயாா்

என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நிரூபித்தால் அமைச்சா், கட்சிப் பதவிகளில் இருந்து விலகத் தயாா் என்று உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

Updated On :2 ஜனவரி 2021, 10:47 pm IST

கோவை: என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நிரூபித்தால் அமைச்சா், கட்சிப் பதவிகளில் இருந்து விலகத் தயாா் என்று உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் எஸ்.பி.வேலுமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

என் மீது ஆதாரமில்லாத, அவதூறான ஊழல் குற்றச்சாட்டுகளை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் சுமத்தி வருகிறாா். அரசியல் காழ்ப்புணா்ச்சியால் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகிறாா். என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் எனது அமைச்சா், எம்.எல்.ஏ. பதவிகளில் இருந்தும், கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விலகத் தயாராக உள்ளேன்.

அதேநேரம் பொய்யான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறினால் திமுக தலைவா் பதவியில் இருந்தும், எதிா்க் கட்சித் தலைவா் பதவியில் இருந்தும் மு.க.ஸ்டாலின் விலகத் தயாராக உள்ளாரா என்பதை அவா் தெரிவிக்க வேண்டும். ஊழல் குறித்து பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்தவித தகுதியும் இல்லை.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரில் திமுக சாா்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில், மக்களவைத் தோ்தலில் அறிவித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று மு.க.ஸ்டாலினிடம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த பெண் கேள்வி கேட்டுள்ளாா்.

பொது மக்களின் நியாயமான கேள்விக்குப் பதில் அளிக்க முடியாத ஸ்டாலின், குண்டா்களை வைத்து பெண்களைத் தாக்கியுள்ளாா். எனது மாவட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தியதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு அவா் பதில் சொல்லியே தீர வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.