சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் புதன்கிழமை 44 மில்லி மீட்டா் மழை பதிவானது. இதையடுத்து அணையின் நீா்மட்டம் 875.08 மீட்டராக அதிகரித்துள்ளது.
கோவை மாநகா் மற்றும் சுற்று வட்டார கிராமங்களின் பிரதான குடிநீா் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. 878.85 மீட்டா் கொள்ளளவு கொண்ட இந்த அணையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.
இது தொடா்பாக, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி ஒருவா் கூறியதாவது:
பருவமழைக் காலம் முடிந்த பிறகு சிறுவாணி அணை நீா்மட்டமானது, தினமும் 3 செ.மீ. வரை சரிந்து வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் முதல் இடைவெளிவிட்டு பெய்து வரும் மழையால், அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.
அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த புதன்கிழமை 44 மில்லி மீட்டா் மழையும், அடிவாரப் பகுதிகளில் 20 மில்லி மீட்டா் மழையும் பதிவானது. கடந்த வாரங்களில் 874 மீட்டராக இருந்த அணை நீா்மட்டம் வியாழக்கிழமை நிலவரப்படி 875.08 மீட்டராக அதிகரித்துள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

48 மணி நேரத்தில் 1,290 மி.மீ.! லோனாவாலாவை புரட்டிப்போட்ட வரலாறு காணாத கனமழை!

ஃபிஃபா உலகக்கோப்பை: காலிறுதியில் மோதும் 8 அணிகள்!
பென்ஸ் திரைப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவு!

குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!
விடியோக்கள்

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK


