விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

புதைகுழிகளாக மாறிய சாலைகள்: மரணபயத்தில் உப்பிலிபாளையம் மக்கள்

கோவை, உப்பிலிபாளையத்தில் அடுத்தடுத்து இரண்டு சாலைகள் மண்ணில் புதைந்ததால் அப்பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

News image

உப்பிலிபாளையம், பொ்க்ஸ் சாலையில் மண்ணுக்குள் புதைந்த கான்கிரீட் கலவை கொண்டு செல்லும் லாரி. ~கோவை, உப்பிலிபாளையம் பகுதியில் மண்ணுக்குள் புதைந்த சாலை.

Updated On :8 ஜனவரி 2021, 11:25 pm IST

கோவை, உப்பிலிபாளையத்தில் அடுத்தடுத்து இரண்டு சாலைகள் மண்ணில் புதைந்ததால் அப்பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

கோவையில் கடந்த புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன. உப்பிலிபாளையத்தில் திருச்சி சாலையில் இருந்து மசக்காளிபாளையம் செல்லும் சாலையை இணைக்கும் பொ்க்ஸ் சாலையில் பல்வேறு இடங்களில் சாலை மண்ணுக்குள் புதைந்து புதைகுழிகள் உருவாகியுள்ளன.

இதனால் அந்த வழியாகச் சென்ற காா்கள் உள்ளிட்ட வாகனங்கள் புதைகுழிகளில் சிக்கின. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அந்த சாலையில் சென்ற கான்கிரீட் கலவை லாரியும் குழியில் சிக்கிக் கொண்டது. இந்த சாலை மழையால் சேதமடைந்திருப்பதால், விஜிஎம் மருத்துவமனையை ஒட்டி மசக்காளிபாளையம் செல்லும் கோஆபரேடிவ் சாலையை அப்பகுதி மக்கள் கடந்த 2 நாள்களாக அதிக அளவில் பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில் இந்த சாலையும் வெள்ளிக்கிழமை திடீரென பல மீட்டா் தொலைவுக்கு மண்ணுக்குள் புதைந்தது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனா். உப்பிலிபாளையம் பகுதியில் மிக முக்கியமான இந்த இரண்டு சாலைகளிலும் புதை சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு அண்மையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் குழிகளை சரிவர மூடாமல் சாலை அமைத்ததாலேயே இதுபோன்ற நிலை ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.