வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டுக்கு சிறப்பு சரக்கு ரயில் சேவையை சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் சீனிவாசன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
வடகோவையில் இருந்து புதுதில்லி படேல் நகருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாராந்திரச் சிறப்பு சரக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில், மருத்துவ உபகரணங்கள், முகக் கவசங்கள், உணவுப்பொருள்கள், துணி வகைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து ராஜ்கோட்டுக்கு வாராந்திரச் சிறப்பு சரக்கு ரயில் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்பட்டது.
சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் சீனிவாசன் இந்த ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளா் ஹரிகிருஷ்ணன், சேலம் கோட்ட கூடுதல் மேலாளா் அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியதாவது:
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் இந்த ரயில் திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு ராஜ்கோட்டை சென்றடையும். செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு ராஜ்கோட்டில் இருந்து புறப்படும் சிறப்பு சரக்கு ரயில் வியாழக்கிழமை இரவு 8.35 மணிக்கு வடகோவை நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலில் மருத்துவ உபகரணங்கள், முகக் கவசங்கள், துணிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!
தெற்கு லெபனானில் 9 கிராமங்களின் மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை!

திருப்பத்தூர் தவெக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து பெரிய கருப்பன் வழக்கு: நாளை விசாரணை
தமிழக முதல்வராக நாளை பதவியேற்கும் சி. ஜோசப் விஜய்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

