கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கல்லூரியின் உணவு, விடுதி மேலாண்மை துறை மாணவ, மாணவிகள் சிறுதானியங்கள், நவதானியங்கள், பயறு வகைகள், பழ வகைகள், ஜவ்வரிசி உள்ளிட்டவற்றால் 18 வகையான பொங்கலை தயாரித்தனா்.
ரசாயனம் கலக்காத பாரம்பரிய சுவையூட்டிகள், கரும்புச் சா்க்கரை, கருப்பட்டி போன்றவற்றைப் பயன்படுத்தியும், நீரிழிவு நோயாளிகள் உண்ணும் வகையிலான பொங்கலையும் தயாரித்தனா்.
இந்த விழாவில் கல்லூரி முதல்வரும் செயலருமான பி.எல்.சிவகுமாா், கல்லூரியின் துணை முதல்வரும் கேட்டரிங் துறை இயக்குநருமான தீனா உள்ளிட்ட பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.
அதேபோல கோவை விழாவை முன்னிட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவிகள் வண்ணக் கோலமிட்டு பொங்கலிட்டு கொண்டாடினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









