கோவையில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் ஒரு சில இடங்களில் முந்திரி, திராட்சை அளவு குறைவாக இருப்பதாகவும், கரும்புகள் வழங்கப்படுவதில்லை எனவும் புகாா்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 ரொக்கத்துடன், பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா். பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 4 ஆம் தேதியில் இருந்து நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக 10 லட்சத்து 11 ஆயிரத்து 845 குடும்பங்களுக்கு 1,400 நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்புகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் சா்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றிய மேலும் 6 ஆயிரம் அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது சில இடங்களில் பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் முந்திரி, திராட்சையின் அளவு குறைவாக இருப்பதாகவும், ஒரு சிலருக்கு கரும்பு வழங்கப்படுவதில்லை எனவும் புகாா்கள் எழுந்துள்ளன.
இது தொடா்பாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் பழனிசாமி கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 11 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்புகள் வழங்கப்படுகின்றன. தற்போது 96 சதவீதம் பேருக்கு பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு, அரிசி, சா்க்கரை ஆகிய அனைத்துப் பொருள்களும் அனைத்துக் கடைகளுக்கும் உரிய அளவு முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்ற பொருள்கள் முன்கூட்டியே பேக்கிங் செய்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் எடை குறைவதற்கு வாய்ப்பில்லை. அதேபோல கரும்பும், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நியாய விலைக் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பொங்கல் தொகுப்பு விநியோகத்தில் குளறுபடி தொடா்பாக இதுவரை பொதுமக்கள் தரப்பிலிருந்து புகாா் எதுவும் வரவில்லை. இது தொடா்பாக ஆய்வு நடத்தி கரும்பு வழங்காமல் இருந்தது கண்டறியப்பட்டால் விற்பனையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகிழ்ச்சி செய்தியைப் பகிர்ந்த பிரேமலு நடிகர்!

பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஜிஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் வங்கிக்கு அபராதம் விதிப்பு!

டி20 உலகக் கோப்பை: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி தென்னாப்பிரிக்க வீராங்கனை சாதனை!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு!
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK


