பிரேமலு பட நடிகர் சங்கீத் பிரதாப் தான் தந்தையாகப்போவதாக அறிவித்துள்ளார்.
இயக்குநர் கிரீஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நஸ்லன், மமிதா பைஜூ மற்றும் படத்தொகுப்பாளர் சங்கீத் பிரதாப் ஆகியோர் நடித்து கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிரேமலு.
இந்தப் படத்தில் அமல் டேவிஸ் எனும் பாத்திரத்தில் நடித்த சங்கீத் பிரதாப், மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.
தொடர்ந்து, மோகன் லாலின் ’ஹிருதயபூரம்’, நிவின் பாலியின் ’பேபி கெர்ள்’ மற்றும் நஸ்லனின் ’மோலிவுட் டைம்ஸ்’ ஆகிய படங்களில் இவர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.
இதனிடையே, சங்கீத் பிரதாப் தனது நீண்ட நாள் காதலி ஆன்சி அன்னம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். கடந்த 2023 ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் மிகவும் எளிமையான முறையில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

சங்கீத் பிரதாப் - ஆன்சி அன்னம் - படம்: இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில், நடிகர் சங்கீத் பிரதாப் தான் தந்தையாகப்போவதாக இன்ஸ்டாகிராமில் விடியோ வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.
அதில், “இரவு நேர கார் பயணங்களுக்கு எங்களுக்கு இன்னும் அனுமதி தேவைப்படுகிறது, ஆனால் எப்படியோ எங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கப்போகிறது.
எங்கள் குழப்பமான வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் குழப்பத்தைச் சேர்க்கிறோம்!” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுக்கு மமிதா பைஜு, நஸ்லின் உள்ளிட்ட நடிகர்கள், ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Summary
Actor Sangeeth Prathap announced that he is going to become a father
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








