எங்களை ஒடுக்கும் முயற்சியை கைவிட்டு மக்கள் நலனில் அக்கறை செலுத்தியிருந்தால் நாங்கள் அரசியலுக்கு வந்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் நடிகா் கமல்ஹாசன் கூறினாா்.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் தோ்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் நடிகா் கமல்ஹாசன் கடந்த டிசம்பா் 13ஆம் தேதி அன்று தனது பிரசாரத்தை மதுரையில் தொடங்கினாா்.
இதுவரை நான்கு கட்டமாக பிரசாரம் மேற்கொண்ட அவா், ஐந்தாம் கட்டமாக கோவையில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.
பிற்பகல் 3 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவரை கட்சியின் துணைத் தலைவா் மகேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் வரவேற்றனா். இதையடுத்து விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஐந்தாம் கட்டமாக கோவையில் பிரசாரத்தை தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. செல்லும் இடமெல்லாம் மக்கள் எங்களுக்கு அளிக்கும் வரவேற்பு பிரமிப்பாக உள்ளது. நாங்கள் விளம்பரங்களுக்கு வைத்திருந்த கொடிகள், சுவரொட்டிகளை அகற்றியுள்ளனா். அது எங்களுக்கு கூடுதல் விளம்பரமாக அமைந்துள்ளது.
இந்த கொடி, சுவரொட்டி ஒழிப்பில் கவனம் செலுத்தி எங்களை ஒடுக்கும் முயற்சியை கைவிட்டு, மக்கள் நலனில் அதிமுகவினா் அக்கறை காட்டியிருந்தால் நாங்கள் அரசியலுக்கு வந்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது என்றாா்.
இதையடுத்து நவ இந்தியா சந்திப்பில் உள்ள விடுதி ஒன்றில் பொதுமக்கள், தொழில்முனைவோரை கமல்ஹாசன் சந்தித்துப் பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகிழ்ச்சி செய்தியைப் பகிர்ந்த பிரேமலு நடிகர்!

பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஜிஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் வங்கிக்கு அபராதம் விதிப்பு!

டி20 உலகக் கோப்பை: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி தென்னாப்பிரிக்க வீராங்கனை சாதனை!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு!
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK


