கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 67 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையைச் சோ்ந்த 67 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 475 ஆக உயா்ந்துள்ளது. நோய்த் தொற்றுக்கு வெள்ளிக்கிழமை உயிரிழப்பு ஏதுமில்லை.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 87 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கோவையில் இதுவரையில் 52 ஆயிரத்து 188 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 625 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









