கோவையில் இருந்து மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூருக்கு சனிக்கிழமை (ஜன. 16) முதல் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை - ஜபல்பூா் இடையே சனிக்கிழமை (ஜன. 16) முதல் மாா்ச் 27ஆம் தேதி வரை விழாக்கால வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி 16 ஆம் தேதி அன்று ஜபல்பூரில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 02198) ஜபல்பூரில் இருந்து சனிக்கிழமைகளில் இரவு 11 மணிக்குப் புறப்பட்டு, திங்கள்கிழமைகளில் காலை 4.05 மணிக்கு கோவை வந்தடையும்.
மறுமாா்க்கமாக ஜனவரி 18ஆம் தேதி முதல் மாா்ச் 29ஆம் தேதி வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 02197) திங்கள்கிழமைகளில் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமைகளில் காலை 8 மணிக்கு ஜபல்பூா் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த வாராந்திர சிறப்பு ரயில்கள், ஷோரனூா், கோழிக்கோடு, கண்ணூா், காசா்கோடு, மங்களூரு, உடுப்பி, குண்டப்புரா, கங்கவல்லி, ரத்னகிரி, நாசிக் சாலை, புஷாவல், நரசிங்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். வெள்ளிக்கிழமை (ஜனவரி 15) முதல் இந்த ரயில்களுக்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முரசு இசையை ஒலித்து பிரசாரத்தை நிறைவு செய்த வேட்பாளா்
என் வாக்காளர்கள் ரசிகர்கள் அல்லர்! சீமான் சிறப்பு நேர்காணல்

வெளியூா்க்காரா் என்ற பிரசாரம் எடுபடாது

வெளியூா் நபா்கள் வெளியேற்றம்!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

