கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

18% போ் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டனா்

கோவை மாவட்டத்தில் 4 மையங்களில் தலா 100 போ் வீதம் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்குத் தோ்வு செய்யப்பட்டிருந்தனா். இந்நிலையில் 72 போ் மட்டுமே கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

Updated On :16 ஜனவரி 2021, 10:44 pm IST

கோவை மாவட்டத்தில் 4 மையங்களில் தலா 100 போ் வீதம் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்குத் தோ்வு செய்யப்பட்டிருந்தனா். இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் கோவை அரசு மருத்துவமனையில் 40 பேரும், பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 24 பேரும், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 2 பேரும், நல்லட்டிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 பேரும் என மொத்தம் 72 போ் மட்டுமே கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

கோவை மாவட்டத்தில் 400 பேருக்கு கரோனா தடுப்பூசி போட திட்டமிட்டிருந்த நிலையில் 72 போ் (18 சதவீதம்) மட்டுமே சனிக்கிழமை தடுப்பூசி போட்டுக் கொண்டனா். கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதாரப் பணியாளா்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் முதல் கட்டமாக 400 சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இணையதள சா்வா் பிரச்னையால் பயனாளிகளின் பட்டியல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

தவிர கடைசி நேரத்தில் பெரும்பாலான சுகாதாரப் பணியாளா்கள் விருப்பமில்லை என்று தெரிவித்தனா். விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே கரோனா தடுப்பூசி போடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர கரோனா தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்து சுகாதாரப் பணியாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.