ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கவிதை நூல் வெளியீட்டு விழா

விருத்தாசலத்தை அடுத்த முருகன்குடி கிராமத்தில் "உயி(ய)ர் மூச்சு' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :2 மே 2013, 6:43 am

விருத்தாசலத்தை அடுத்த முருகன்குடி கிராமத்தில் "உயி(ய)ர் மூச்சு' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் கவிஞர் ரா.தீபன்குமார் எழுதிய "உயி(ய)ர் மூச்சு' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.கவிதை நூலை எழுத்தாளர் இமயம் வெளியிட முனைவர் இரத்தின.புகழேந்தி, திராவிடர் கழக மாநில மாணவரணிச் செயலர் த.சீ.இளந்திரையன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.விழாவில், கவிஞர் செ.அமிர்தராசு வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் பழனியப்பன் தலைமை ஏற்றார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறைப் பேராசிரியர் மு.வள்ளியம்மை முன்னிலை வகித்தார்.திராவிடர் கழகப் பேச்சாளர் முத்து.கதிரவன், கவிஞர் கரிகாலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாவட்டப் பொருளர் மாய.முனுசாமி, ஜெகதீஸ்வரன், பிச்சைமொஷிதீன், கவிராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கவிதை நூல் ஆசிரியர் கவிஞர் ரா.தீபன்குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.