மகளிர் இலவசப் பேருந்துக்கு எதிர்ப்பு; போராட்டம் அறிவிப்பு!என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?ஆதார் - மின்னஞ்சல் இணைப்புக்கு கட்டணம் இல்லை! அதனால் பயனென்ன?ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சிஅண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
/

பண்ருட்டியில் கடைகளில் தொடர் கொள்ளை: போலீஸார் திணறல்

பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள கடைகளில் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்து

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:10 am IST

பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள கடைகளில் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

÷மேலும் இச்சம்பவங்களில் தொடர்புடைய கொள்ளையர்களைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

÷பண்ருட்டி காவல் சரகத்தில் பண்ருட்டி, காடாம்புலியூர், புதுப்பேட்டை, முத்தாண்டிக்குப்பம், நடுவீரப்பட்டு, நெல்லிக்குப்பம் ஆகியப் பகுதிகளில் காவல் நிலையங்கள் அமைந்துள்ளன.

÷இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களில் மட்டும் பண்ருட்டி நகரப் பகுதியில் சுமார் 6, 7 கடைகளின் பூட்டுகளை உடைத்து கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

÷இச்சம்பவங்கள் நிகழ்ந்த அனைத்து இடங்களும் பகல், இரவு நேரங்களில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும்.

÷இதுமட்டுமின்றி பண்ருட்டியில் வழிப்பறிச் சம்பவங்களும் சகஜமாகி விட்டது.

போலீஸார் திணறல்:

÷இந்த தொடர் கொள்ளை மற்றும் வழிப்பறிச் சம்பவங்களால் பண்ருட்டி பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், இக்கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

÷இதனால் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் பண்ருட்டி பகுதிகளில் இரவு நேர ரோந்தைப் போலீஸார் அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.