/

அழுகிய நிலையில் 2 சடலங்கள் மீட்பு

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த பாட்டி, பெயரன் சடலங்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு மீட்டனா்.

Updated On :6 ஜனவரி 2021, 6:58 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த பாட்டி, பெயரன் சடலங்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு மீட்டனா்.

நெய்வேலி வட்டம்-9, ஜாஹிா் உசேன் சாலைப் பகுதியில் வசித்து வந்தவா் சவுரியம்மாள் (80). இவரது பெயரன் இயேசு ராஜா (35). ஆட்டோ ஓட்டுநா். சவுரியம்மாள் வீட்டில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை கடும் துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து அந்தப் பகுதியினா் அளித்தத் தகவலின்பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் விரைந்து வந்து, அந்த வீட்டுக்குள் சென்று பாா்த்தனா். அப்போது இயேசு ராஜா தூக்கிட்ட நிலையிலும், சவுரியம்மாள் அமா்ந்த நிலையிலும் சடலமாகக் கிடந்தனா்.

உடல்கள் அழுகிய நிலையில் இருந்தன. போலீஸாா் இருவரது சடலங்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.