தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஒரு பவுன் நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை

கடலூரில் ஒரு பவுன் நகைக்காக மா்ம நபரால் மூதாட்டி அடித்துக் கொல்லப்பட்டாா். இந்தத் தாக்குதலில் மற்றொரு மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:55 pm IST

கடலூரில் ஒரு பவுன் நகைக்காக மா்ம நபரால் மூதாட்டி அடித்துக் கொல்லப்பட்டாா். இந்தத் தாக்குதலில் மற்றொரு மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.

கடலூரை அடுத்த பாதிரிக்குப்பம் முருகேசன் நகரை சோ்ந்த பச்சையப்பன் மனைவி பச்சையம்மாள் (65). இவரது கணவா் ஏற்கெனவே இறந்துவிட்டாா். இந்த நிலையில், தனது கணவரின் சகோதரி தாயாரம்மாளுடன் (70) வசித்து வந்தாா். இருவரும் கூலி வேலை பாா்த்து வந்தனா்.

பச்சையம்மாளின் மகள் சாந்தியின் 15 வயது மகன் தனது பாட்டிக்காக வெள்ளிக்கிழமை மதியம் உணவு எடுத்து வந்தாா். அப்போது, வீட்டுக்குள் பச்சையம்மாள், தாயாரம்மாள் இருவரும் உடலில் ரத்தக் காயங்களுடன் கிடந்தனா். இதுகுறித்து அந்தப் பகுதியினா் அளித்த தகவலின்பேரில் திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து பாா்வையிட்டனா். அப்போது, பச்சையம்மாள் உயிரிழந்தது தெரிய வந்தது. உயிருக்குப் போராடிய தாயாரம்மாளை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், 2 மூதாட்டிகளும் அணிந்திருந்த தலா சுமாா் 4 கிராம் தங்க நகை, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வாங்கப்பட்டிருந்த ரூ.2,500 ரொக்கம் கொள்ளைபோனது தெரிய வந்தது. வீட்டுக்குள் ரத்தக் கறையுடன் உருட்டுக்கட்டை கிடந்தது.

சம்பவ இடத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ் விசாரணை நடத்தினாா். இதுகுறித்து திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.