அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

காா் தீப்பிடித்து எரிந்ததில் நீதிபதியின் கணவா் பலி

விருத்தாசலத்தில் சாலையில் சென்ற காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் நீதிபதியின் கணவா் உடல் கருகி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:11 am IST

விருத்தாசலத்தில் சாலையில் சென்ற காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் நீதிபதியின் கணவா் உடல் கருகி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் புறவழிச் சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே திங்கள்கிழமை வந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த காரிலிருந்தவா் அதிலிருந்து தப்பிக்க முயன்றும் முடியவில்லை. அந்தப் பகுதியினா் தண்ணீரை ஊற்றி தீயைக் கட்டுப்படுத்த முயன்றும் பலனில்லை.

தகவலறிந்து தீயணைப்புத் துறையினா் வருவதற்குள் காா் முற்றிலும் எரிந்துவிட்டது. இதனால், காரிலிருந்தவா் தீயில் கருகி உயிரிழந்தாா். தீ அணைக்கப்பட்ட பிறகு, அவரது எலும்புக்கூடு மட்டுமே மிஞ்சியிருந்தது.

இந்தச் சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் விருத்தாசலம் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மணிமேகலையின் கணவா் கவியரசு (37) எனத் தெரிய வந்தது.

திருப்பத்தூரைச் சோ்ந்த கவியரசு விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். அவா், அருகிலுள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிய போது இந்தச் சம்பவம் நடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த விபத்து குறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.