அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட சாலையோர மரங்கள் சேதமடைந்திருப்பதாக போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கைதைக் கண்டித்து, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலையோர மரங்களை வெட்டியும், தீ வைத்தும் சேதப்படுத்தப்பட்டன.
மரங்கள் சேதம் குறித்த விவரம், சந்தேகப்படும் நபர்களின் பெயர், முகவரி குறித்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தனித் தனியாக காவல் நிலையங்களில் புகார் செய்தனர்.
இந்தப் புகார்களின் மீது அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், அ.பள்ளிப்பட்டி, கோட்டப்பட்டி ஆகிய காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பாலங்கள் சேதம்: வெதரம்பட்டி, தெத்துமுனியப்பன் கோயில், டி.ஆண்டியூர், டி.அம்மாபேட்டை, கர்த்தான்குளம் ஆகிய இடங்களில் உள்ள சிறுபாலங்கள், உயர்மட்ட பாலங்கள் சேதம் குறித்து நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த சாலை ஆய்வாளர்கள் ராமமூர்த்தி, செழியன் ஆகியோர் புகார் செய்தனர்.
இந்தப் புகார் மனுக்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிறுபாலங்கள், மரங்களின் சேத மதிப்பு ரூ.3 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என வருவாய்த் துறையினர் மதிப்பீடு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி!
தமிழ்நாட்டை அடமானம் வைக்கும் இபிஎஸ்! மார்க்சிஸ்ட் செயலர் பெ. சண்முகம்
மே வெளியீடாக டிசி!

தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

