வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பேருந்திலிருந்து பெற்றோர் தவற விட்ட 10 மாத பெண் குழந்தை மீட்பு

சுற்றுலா வந்த இடத்தில் பெற்றோர் தவறவிட்ட 10 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Updated On :11 மே 2013, 12:34 pm IST

சுற்றுலா வந்த இடத்தில் பெற்றோர் தவறவிட்ட 10 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி உஷா. இவர்களது 10 மாத பெண் குழந்தை லோகேஸ்வரி. குழந்தை மற்றும் உறவினர்கள், நண்பர்களுடன் தென் மாவட்டங்களுக்கு பேருந்தில் சுற்றுலா வந்தனர்.

தருமபுரியை அடுத்துள்ள பெரியாம்பட்டியில் வியாழக்கிழமை மாலை பேருந்தை நிறுத்தி அனைவரும் ஓய்வெடுத்தனர். அப்போது, பேருந்தில் இருந்த குழந்தை லோகேஸ்வரி தவறி விழுந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கவனிக்காமல் பேருந்து சென்று விட்டது. கேட்பாரின்றி சாலையோரம் தவழ்ந்து சென்ற குழந்தையை அந்த வழியாகச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் முருகன் பார்த்து விசாரித்துள்ளார்.

ஆனால், குழந்தை யாருடையது என்பது தெரியவில்லை. குழந்தையின் உடலில் சிராய்ப்பு காயங்கள் இருந்தன. இதையடுத்து, குழந்தையை தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு காரிமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீஸார் விசாரணையில், வேலூரைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா வந்த பேருந்தில் இருந்து குழந்தை தவறியது தெரிய வந்தது.

இதையடுத்து, உரிய விசாரணை நடத்தி குழந்தையை அதன் பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.