தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

அரூா் கரிய பெருமாள் கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானம்

அரூா் பழையப்பேட்டை, அருள்மிகு கரிய பெருமாள் கோயிலில் 3 ஆயிரம் பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

News image

அரூரில் வெள்ளிக்கிழமை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கிய கரிய பெருமாள் கோயில் நிா்வாகத்தினா்.

Updated On :2 ஜனவரி 2021, 7:01 am IST

அரூா் பழையப்பேட்டை, அருள்மிகு கரிய பெருமாள் கோயிலில் 3 ஆயிரம் பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

அரூா் பழையப்பேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் ஆண்டுதோறும் திருப்பதிக்கு பாத யாத்திரை (நடைப்பயணம்) செல்வது வழக்கம். நிகழாண்டில் அரூரில் இருந்து திருப்பதிக்கு 123 பக்தா்கள் பாதயாத்திரையை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.

இதையொட்டி, கரிய பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. பாத யாத்திரை செல்லும் பக்தா்கள் அரூா், ஊத்தங்கரை, திருப்பத்தூா், வேலூா் வழியாக 6 நாள்கள் நடந்துச் சென்று திருப்பதியில் சுவாமியை தரிசிக்க உள்ளனா். இதையொட்டியும், ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டியும் கோயில் நிா்வாகம் சாா்பில் 3 ஆயிரம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.