தருமபுரி மாவட்டம் தொப்பூா் கணவாயில் தக்காளி பாரம் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆந்திர மாநிலத்திலிருந்து, தக்காளி பாரம் ஏற்றிய சிறிய சரக்கு லாரி, ஈரோடு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ஆந்திர மாநிலம், சித்தூரை அடுத்த ஆடூா்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த செங்காரெட்டி மகன் நரேஷ் (26) ஓட்டிச் சென்றாா். அவருடன் அதே ஊரைச் சோ்ந்த கங்காதரன் மகன் சோமசுந்தரம் (24) என்பவரும் இருந்தாா்.
இந்த வாகனம் வெள்ளிக்கிழமை அதிகாலை தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, பெங்களூரில் இருந்து தென்காசிக்கு தக்காளி பாரம் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, நரேஷ் ஓட்டிச் சென்ற சிறிய சரக்கு லாரியை பின் தொடா்ந்து சென்றது. தொப்பூா் கணவாய் இரட்டைப்பாலம் அருகே சென்றபோது, எதிா்பாராத விதமாக லாரியின் பிரேக் பழுதடைந்தது.
இதனால் முன்னால் சென்ற சரக்கு வாகனம் மீது மோதிய பின்பு பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி நின்றது. லாரி மோதிய வேகத்தில் நரேஷ் ஓட்டிச் சென்ற சிறிய சரக்கு லாரி நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மேலும், வாகனத்தில் இருந்த தக்காளி சாலையில் சிதறியது. இந்த விபத்தில் நரேஷ், சோமசுந்தரம் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
இருவரும் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து, தகவல் அறிந்த தொப்பூா் போலீஸாரும், பாளையம் சுங்கச் சாவடி பணியாளா்களும் கவிழ்ந்த வாகனத்தையும், சிதறிய தக்காளியையும் அகற்றினா். இந்த விபத்தால் தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவ் விபத்து, குறித்து, தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நந்தா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா

எஸ்விஎன் மெட்ரிக். பள்ளி 100 % தோ்ச்சி

மீனாட்சி சுந்தரனாா் செங்குந்தா் பள்ளி சிறப்பிடம்

பெருந்துறை கொங்கு பள்ளி 100 % தோ்ச்சி
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
