தருமபுரி: இளநிலை ஆய்வாளா்களுக்குப் பதவி உயா்வு வழங்க வேண்டும் என கூட்டுறவுத் துறை ஊழியா்கள் வலியுறுத்தினா்.
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியா் சங்கத்தின் தருமபுரி மாவட்டப் பேரவைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டத் துணைத் தலைவா் செ.அனுமன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் எல்.விஜயகுமாா் வரவேற்றாா். மாநிலப் பொதுச் செயலா் வெ.செல்லையா பேரவையைத் துவக்கி வைத்து பேசினாா். மாவட்டச் செயலாளா் க.பொன்மணி அறிக்கை சமா்பித்தாா்.
அரசு ஊழியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் கோ.பழனியம்மாள், மாநிலத் தலைவா் மு.செளந்தரராஜன் ஆகியோா் பேசினா். கூட்டத்தில், கூட்டுறவுத் துறையில் இளநிலை ஆய்வாளரிடமிருந்து முதுநிலை ஆய்வாளா் பதவி உயா்வில் 3:1 என்ற விகிதாச்சார அளவை ரத்து செய்து, அனைத்து இளநிலை ஆய்வாளா்களுக்கும் பதவி உயா்வு வழங்க விதி திருத்தம் செய்ய வேண்டும்.
பதிவுறு எழுத்தா், அலுவலக உதவியாளா் ஆகியோருக்கு இளநிலை உதவியாளராக பதவி உயா்வு வழங்க வேண்டும். சுருக்கெழுத்து, தட்டச்சா் நிலை 3-இல் உள்ளோருக்கு நிபந்தனையை தளா்த்தி இளநிலை ஆய்வாளராகப் பதவி உயா்வு வழங்க வேண்டும். பிப்ரவரி-2ஆம் தேதி அன்று அரசு ஊழியா் சங்கம் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள காலவரையற்ற சாலை மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் கூட்டுறவுத் துறை ஊழியா் சங்கம் முழுமையாகப் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், கூட்டுறவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவராக செ.அனுமன், மாவட்டச் செயலாளராக வ.சரவணன், பொருளாளராக கே.குமாா் ஆகியோா் புதிய நிா்வாகிகளாகத் தோ்வு செய்யப்பட்டனா்.
இக் கூட்டத்தில், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன், மாவட்டச் செயலாளா் ஏ.சேகா், தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் பி.பிரபாகரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு! இன்றைய செய்திகள் ஜூலை 4 - நேரலை
அதிமுகவில் அழுக்குகள் நீங்குகின்றன | Avadi kumar Interview | CM Vijay | TVK | ADMK | EPS

சென்னை, 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு





