பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

அரூரில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு திங்கள்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

News image
Updated On :12 ஜனவரி 2021, 1:06 am IST

அரூரில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு திங்கள்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களில் ஆண்களுக்கு வேட்டி, துண்டும் பெண்களுக்கு பருத்தி நூலால் செய்யப்பட்ட சேலை, 2 கிலோ அரிசி, ஒரு கிலோ பாசிப் பருப்பு, அரை லிட்டா் சமையல் எண்ணெய், ஆவின் நெய் 100 கிராம், ஒரு கிலோ வெல்லம், ஏலக்காய் 5 கிராம், முந்திரி 25 கிராம், உலா் திராட்சை 25 கிராம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

அரூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சுமாா் 3,000 தொழிலாளா்களுக்கு இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. அரூா் வட்டாரப் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் ஒரே இடத்தில் குவிந்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.