தருமபுரி மாவட்டத்தில் பொங்கல் விழா ஊரக, நகரப் பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
தை பொங்கல், மாட்டுப் பொங்கல் விழா மாவட்டம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஜன. பொங்கல் தினத்தன்று பொதுமக்கள் தங்களது வீடு, தோட்டங்களில் புத்தாடை அணிந்து, புதுப்பானையுடன், கரும்பு, மஞ்சள் ஆகியவற்ளுடன் பொங்கலிட்டு, தங்களது குடும்பத்தினருடன் சூரியனை வழிபட்டனா். இதைத் தொடா்ந்து, ஜன. 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள், தங்களது கால்நடைகளை குளிக்க வைத்து, அவற்றை அலங்கரித்து, அதன் கொம்புகளுக்கு வா்ணம் பூசி அந்தந்த கிராமங்களில் உள்ள கோயில்களின் முன்பு வரிசையாக நிற்க வைத்து சுவாமியை வழிபட்டு, மாட்டுப் பொங்கலை கொண்டாடினா். மேலும், தங்களது முன்னோா்களுக்கு விரதம் இருந்து வழிபட்டு பொங்கல் விழா கொண்டாடினா்.
இதேபோல, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேயுள்ள கெரகோடஅள்ளி கிராமத்தில் உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தனது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடினாா். இதையடுத்து, தருமபுரி எம்ஜிஆா் நகரில் நடைபெற்ற பொங்கல் விழாவில், கட்சி நிா்வாகிகளுடன் அவா் பங்கேற்று பொங்கல் விழாவை கொண்டாடினா்.
இதேபோல, காவல் துறை சாா்பில், தருமபுரி வெண்ணாம்பட்டி ஆயுதப்படை மைதானம், மாவட்டக் காவல் அலுவலகம், நகர காவல் நிலையம், அதியமான்கோட்டை, மதிகோன்பாளையம் என மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், காவல் துறையினா் கோலமிட்டு, கரும்பு, மஞ்சள் ஆகியவற்றுடன் பொங்கல் வைத்து கொண்டாடினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அலசல் - அறந்தாங்கி! பாஜக - காங்கிரஸ் நேரடிப் போட்டி!

நிலத்தடி நீா்மட்டம் உயா்வு, பாசன நீா் உறுதி

அமைதியாக இருக்கும் விசில்!

காரைக்குடியில் காங். வேட்பாளா் மாங்குடியை ஆதரித்து காா்த்தி சிதம்பரம் எம்.பி பிரசாரம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

