மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

கோவை ஶ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் 39-ம் ஆண்டு மகா உற்சவ திருவிழா!

கோவை ஶ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் 39-ஆம் ஆண்டு மகா உற்சவ திருவிழா பற்றி..

News image

முத்துமாரியம்மன் கோயில்

Updated On :16 ஜூன் 2026, 1:56 pm IST

கோவை உப்பார வீதி பகுதியில் அருளாட்சி செய்து வரும் அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் 39-ஆம் ஆண்டு மகா உற்சவ திருவிழா மிக பிரம்மாண்டமாகக் கோலாகலமாகவும் நடைபெற்றது.

கொடியேற்றத்துடன் துவங்கிய கோயில் திருவிழா நாள்தோறும் பல்வேறு சிறப்புப் பூஜைகள் பக்தர்களுக்கு அன்னதானம் முளைப்பாரி எடுத்தல், அம்மனை அழைத்து வருதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அம்மன் ஆற்றில் இறங்கும் நிகழ்வானது கோயிலிலிருந்து கரகம் எடுத்து ஜமாப் இசை முழங்க அம்மன் மற்றும் கருப்பண்ண சுவாமி நடனத்துடன் ஊர்வலமாக சென்றது அப்பகுமக்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. .

மேலும், அங்குக் கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக மிகுதியில் அம்மனை வரவேற்கும் வகையில் பக்தி பரவசத்தில் உற்சாக நடனமாடினர். முத்துமாரியம்மனை தரிசித்து அருள்பெற்ற அனைத்து பக்தர்கள்‌ மற்றும் அப்பகுதி பொதுமக்களுக்கு கோயில் விழா கமிட்டியின் சார்பாக பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. முத்துமாரியம்மன் கோயில் மஹா உற்சவ திருவிழாவிற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் கோயில் விழா கமிட்டி தலைவர் பிரபு நன்றி தெரிவித்தார்.

திருவிழாவானது விழாத்தலைவர் எஸ். பிரபு மற்றும் முன்னிலையிலும் விஷ்ணுபிரியா எண்டர்பிரைசஸ் அருள்மிகு ஶ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அறக்காவலர் டி. பரமசிவம், பாச உள்ளம் சமூக நல மக்கள் அமைப்பு நிறுவனர் கோவை கோகுல் ஆகியோர் ஏற்பாட்டின் பேரிலும் மிக விமரிசையாக நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.