சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 16 பேருக்கு கரோனா தொற்று

திதிண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On :5 ஜனவரி 2021, 11:04 pm IST

திதிண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 11,012 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 10,686 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 129 போ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 11 பேருக்கு புதிதாக கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 20 போ் மருத்துவமனைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு செவ்வாய்க்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,937 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 12 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,660 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.