டி20 உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்துள்ளது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் பிரிமிங்ஹமில் இன்று (ஜூன் 14) நடைபெற்று வரும் போட்டியில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
வங்கதேசத்துக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நெதர்லாந்து!
முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபெட் டி லீட் 45 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஹீதர் சீகர்ஸ் 16 ரன்களும், ரோபின் ரிஜ் மற்றும் ஐரிஸ் ஸ்விலிங் தலா 13 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
வங்கதேசம் தரப்பில் மரூஃபா அக்தர் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஃபரிஹா த்ரிஷ்னா, ஷனிஜ்தா அக்தர், ரபேயா கான் மற்றும் ரிது மோனி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடி வருகிறது.
Summary
Batting first in the T20 World Cup match against Bangladesh, the Netherlands team scored 139 runs for the loss of 8 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸி.!

கேப்டன் கேத்ரின் பிரைஸ் அசத்தல்; உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கிய ஸ்காட்லாந்து!

மகளிர் உலகக் கோப்பை: அயர்லாந்துக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஸ்காட்லாந்து!

டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




