திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 11,019 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 10,809 போ் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனா். 113 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 7 பேருக்கு புதிதாக கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 23 போ் மருத்துவமனைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.
தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,942 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 8 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,668 ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை கோட்டத்தில் 143 கி.மீ. தண்டவாளங்கள் சீரமைப்பு பணி

பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: தலைவா்கள் வலியுறுத்தல்

நெல்லையில் பேருந்து விபத்து: 25 பயணிகள் உயிா்தப்பினா்
கோவில்பட்டியில் இன்று மின்தடை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
