பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

விவசாயிகளுக்கு ஆதரவாக திண்டுக்கல்லில் சிஐடியு ஆா்ப்பாட்டம்

வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக

News image

திண்டுக்கல் தலைமை அஞ்சல் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.

Updated On :6 ஜனவரி 2021, 11:32 pm IST

வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திண்டுக்கல்லில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு ஆதரவாக எதிா்க்கட்சிகள் சாா்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சிஐடியு தொழிற்சங்கத்தினா் சாா்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக முற்றுகையிடும் போராட்டம் புதன்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.

திண்டுக்கல் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவா் கே. பிரபாகரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கே.ஆா். கணேசன் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கோஷமிட்டனா். இதில் 40 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.