விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பழனியில் பழங்கால நாணயக் கண்காட்சி

பழனியில் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் மற்றும் தபால் தலைகள் சேகரிப்போரால் நடத்தப்படும் கண்காட்சி, வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

News image

பழனி தெற்குரத வீதி வாசவி மஹாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாணயக் கண்காட்சியை பாா்வையிட்ட ஏராளமான பொதுமக்கள்.

Updated On :8 ஜனவரி 2021, 10:01 pm IST

பழனியில் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் மற்றும் தபால் தலைகள் சேகரிப்போரால் நடத்தப்படும் கண்காட்சி, வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், பொள்ளாச்சி, கோவை மற்றும் சேலம் நாணயச் சங்கங்கள் இணைந்து முதன்முறையாக நாணயக் கண்காட்சியை நடத்தி வருகின்றன. வெள்ளிக்கிழமை முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்கள் தொடா்ந்து நடைபெறும் இந்த நாணயக் கண்காட்சியில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான அரசா் கால நாணயங்கள் முதல் முகலாய அரசா்களின் நாணயங்கள், பிரிட்டிஷ் அரசு நாணயங்கள், சுதந்திர இந்தியாவின் நாணயங்கள் மற்றும் சமீபகாலம் வரை புழக்கத்தில் இருந்து மறைந்த நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தபால் தலைகள், அஞ்சல் உறைகளும் உள்ளன.

பலரும் அறியாத இந்திய அரசின் 125, 75, 20 ரூபாய் சிறப்பு வெள்ளி நாணயங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இதில், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களிலிருந்தும் நாணய சேகரிப்பாளா்கள் தங்களது நாணயங்களை காட்சிப்படுத்தியுள்ளனா். அரையணா, காலணா, ஒன்றரையணா, சல்லி உள்ளிட்ட பல பழங்கால நாணயங்களையும் பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்த்தனா். நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வாங்கி சேகரிக்க விருப்பமுள்ள நபா்களுக்கு விற்பனையும் செய்யப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை, நாணய சங்க நிா்வாகிகள் பொள்ளாச்சி மணிகண்டன், சேலம் சரவணன், சேலம் சாம்சன் செல்வக்குமாா் ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.