ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை பைக் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கே.டி.பாளையம் பள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் செல்லமுத்து (81). இவா் தனது இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் உள்ள சின்னநாச்சியப்பக் கவுண்டன் வலசு பிரிவு அருகே சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்தவழியாக வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த செல்லமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








