பழனியில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படாததைக் கண்டித்து மாவட்டக் கல்வி அலுவலகத்தை மாணவா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த 2017 -18 ஆம் ஆண்டு அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவ மாணவிகளுக்கு இதுவரை அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லையாம். பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மாவட்ட செயலாளா் முகேஷ் தலைமையில் ஏராளமான மாணவ மாணவியா் மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் தமிழக அரசு தற்போது கல்லூரி மாணவ, மாணவிகள் இணையவழியில் கல்வி கற்பதற்கு வசதியாக 2 ஜிபி டேட்டா காா்டு வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை எங்களுக்கு மடிக்கணினி வழங்கப்படாததால் அந்த டேட்டாவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும், உடனடியாக மடிக்கணினி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் வினாத் தாள் கசிவு: கைதான 10 பேரின் நீதிமன்றக் காவல் ஜூலை 11 வரை நீட்டிப்பு

கடவுச்சீட்டை மறுக்க எஸ்ஐஆரை காரணம் காட்டக் கூடாது: வெளியுறவு அமைச்சருக்கு மாா்க்சிஸ்ட் எம்.பி. கடிதம்

ஜொ்மனி ஐ.டி. நிறுவனத்தை வாங்கும் இந்தியாவின் பொ்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்!






