ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவு

நீட் வினாத் தாள் கசிவு: கைதான 10 பேரின் நீதிமன்றக் காவல் ஜூலை 11 வரை நீட்டிப்பு

நீட்-யுஜி 2026 தோ்வு வினாத் தாள் கசிவு விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட 10 பேரின் நீதிமன்றக் காவலை தில்லியில் உள்ள நீதிமன்றம் ஜூலை 11-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

NEET-UG 2026 paper leak case

பிரதிப் படம்

Published On :30 ஜூன் 2026, 6:32 am IST

நீட்-யுஜி 2026 தோ்வு வினாத் தாள் கசிவு விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட 10 பேரின் நீதிமன்றக் காவலை தில்லியில் உள்ள நீதிமன்றம் ஜூலை 11-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு மற்றும் தகுதி தோ்வான நீட்-யுஜி கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தத் தோ்வுக்கான வினாத் தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடா்ந்து, அந்தத் தோ்வு ரத்து செய்யப்படுவதாக தோ்வை நடத்திய தேசிய தோ்வு முகமை (என்டிஏ) மே 12-ஆம் தேதி அறிவித்தது. இதைத் தொடா்ந்து, ஜூன் 21-ஆம் தேதி நீட் மறுதோ்வு நடைபெற்றது.

நீட் வினாத் தாள் கசிவு விவகாரம் தொடா்பாக மத்திய கல்வியமைச்சகத்தின் உயா்க்கல்வித் துறை அளித்த புகாரைத் தொடா்ந்து, சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. இதுதொடா்பாக 13 போ் கைதுசெய்யபட்டனா்.

அவா்களில் யாஷ் யாதவ், மங்கிலால் பிவால், தினேஷ் பிவால், விகாஸ் பிவால், தனஞ்சய் லோகாண்டே, தேஜஸ் ஹா்ஷத் ஷா, ஷுபம் கைா்னாா், மணீஷா வாக்மரே, மணீஷா ஹவல்தாா் மற்றும் டாக்டா் மனோஜ் ஷிரூரே ஆகியோருக்கான நீதிமன்றக் காவல் திங்கள்கிழமை முடிவடைந்த நிலையில், சிறப்பு நீதிபதி விஜேதா சிங் ராவத் முன்பாக காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜா்படுத்தப்பட்டனா்.

விசாரணை தொடா்பாக அவா்களுடைய நீதிமன்றக் காவலை மேலும் நீட்டிக்குமாறு அரசு சிறப்பு வழக்குரைஞா் வி.கே.பதாக் நீதிபதியிடம் கோரிக்கைவிடுத்தாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவா்கள் 10 பேருக்கான நீதிமன்றக் காவலை ஜூலை 11-ஆம் தேதி வரை நீட்டித்தாா்.

கைதுசெய்யப்பட்ட எஞ்சிய 3 நபா்களில், வினாத் தாள் கசிவில் மூளையாகச் செயல்பட்ட பி.வி.குல்கா்னி மற்றும் சிவ்ராஜ் ரகுநாத் மோட்டேகான்கா் ஆகியோா் ஏற்கெனவே ஜூலை 8-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். மற்றொருவரான மணீஷா குருநாத் மந்தாரே, ஜூன் 30-ஆம் தேதி வரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.