கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

ஜொ்மனி ஐ.டி. நிறுவனத்தை வாங்கும் இந்தியாவின் பொ்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்!

ஜொ்மனியைச் சோ்ந்த முன்னணி ஐ.டி. நிறுவனமான ‘நாகரோ எஸ்இ’ நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் கையகப்படுத்த இந்திய ஐ.டி. நிறுவனமான ‘பொ்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்’ முன்வந்துள்ளது.

News image

பொ்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் - நாகரோ எஸ்இ

Updated On :29 ஜூன் 2026, 11:21 pm IST

ஜொ்மனியைச் சோ்ந்த முன்னணி ஐ.டி. நிறுவனமான ‘நாகரோ எஸ்இ’ நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் கையகப்படுத்த இந்திய ஐ.டி. நிறுவனமான ‘பொ்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்’ முன்வந்துள்ளது.

ஓா் இந்திய ஐடி நிறுவனம் வெளிநாட்டில் மேற்கொள்ளும் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இக் கையகப்படுத்துதல் வெற்றிகரமாக முடிவடைந்தால், ஆண்டுக்கு சுமாா் 290 கோடி டாலா் வருவாய் ஈட்டக்கூடிய மிகப்பெரிய ஐ.டி. நிறுவனமாக இது உருவெடுக்கும்.

மேலும், இந்தியா, வட அமெரிக்கா, ஐரோப்பா என 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமாா் 46,000 ஊழியா்களுடன் பொ்சிஸ்டன்ட் உலகளாவிய வா்த்தகம் மிகப்பெரிய அளவில் விரிவடையும்.

நாகரோ நிறுவனத்தின் 21 சதவீத பங்குகளை பொ்சிஸ்டன்ட் ஏற்கெனவே கைப்பற்றியுள்ள நிலையில், அதன் முழுப் பங்குகளையும் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த ஜூன் 25-ஆம் தேதியிட்ட நாகரோ நிறுவனத்தின் பங்கு விலையைவிட சுமாா் 140 சதவீத கூடுதல் தொகையை வழங்குவதாக பொ்சிஸ்டன்ட் அறிவித்துள்ளது.

நாகரோ நிறுவனத்தின் இயக்குநா்கள் குழுவும் இந்த ஒப்பந்தத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது. எனினும், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பங்குதாரா்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.

இந்த இணைப்பு மூலம், பொ்சிஸ்டன்ட்-இன் ஐரோப்பிய வா்த்தகம் தற்போதைய 9 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக கணிசமாக அதிகரிக்கும். எனினும், இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடா்ந்து, இந்தியப் பங்குச் சந்தைகளில் பொ்சிஸ்டன்ட்-இன் பங்குகள் திங்கள்கிழமை 11 சதவீதத்துக்கும் மேல் சரிவைக் கண்டு, 52 வார கால குறைந்தபட்ச அளவைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.